திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் தொடர் வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, கருப்பு பட்டை அணிந்து அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். திமுக ஆட்சி வந்ததும் நிறைவேற்றுவதாகக் கூறி ஏமாற்றியதாகவும், வருவாய்த்துறை அமைச்சர் உறுதி அளித்தும் நிறைவேற்றாததால் போராட்டம் தொடர்வதாகவும், வாழ்வாதார கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்தனர்.