திருத்தணியில் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

திருத்தணி பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 45). இவருக்கு திலகா என்ற மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவர் சென்னை தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திலகா கணவரை விட்டுப் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. 

இதனால் வேலைக்குச் செல்லாமல் கோபி மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனையடுத்து கோபியின் தாய் சென்னை பல்லாவரத்தில் உள்ள காப்பகத்தில் கோபியை அனுமதித்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோபி திருத்தணியில் உள்ள வீட்டிற்கு வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்த நிலையில் இன்று (ஜூன் 12) காலை வீட்டில் கோபி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி