2 குழந்தைகளுடன் தீயில் சிக்கிக் கொண்ட கணவன், மனைவி

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் தாழவேடு காலனியைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(32)  அவரது மனைவி மஞ்சுளா (30)   தம்பதிக்கு மிதுலன் (2 ) நபிலன் (1) என்ற 2 பேர் ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் திருத்தணி முருகப்பாநகரில் உள்ள மகேஷ் என்பவரின் வீட்டில் வாடகைக்கு மேல் தளத்தில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (செப்.5) நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டில் முன் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த 3 இருசக்கர வாகனங்கள் மர்மமான முறையில் தீப்பற்றிக் கொண்டதில் பெட்ரோல் டேங்க் வெடித்ததில் தீ கொழுந்து விட்டு எரிந்து வீட்டை சுற்றி கரும் புகை சூழ்ந்து கொண்டது.  



அப்போது தரை தளத்தில் டைல்ஸ் பெரும் சத்தத்துடன் வெடிக்க தொடங்கியதால் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து பிரேம்குமார் அவரது மனைவி குழந்தைகளுடன் தப்பிக்க படிகள் வழியாக இறங்கி வந்த போது சூழ்ந்தைகள் உப்பட நான்கு பேரும் தீயில் சிக்கிக்கொண்டனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை காப்பாற்றி திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்‌. தீயணைப்பு வீரர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி