திருவள்ளூர் அடுத்த ராமதண்டலம் பகுதியைச் சேர்ந்த அன்பரசு மற்றும் அவரது சகோதரர் தென்னரசு ஆகியோர் காவல் நிலையத்திற்கு கையெழுத்திடச் செல்லும் வழியில் எதிர்தரப்பு கும்பலால் காரில் வந்து வழிமறிக்கப்பட்டு சரமாரியாக வெட்டப்பட்டனர். இதில் தென்னரசு தப்பி ஓட, அன்பரசுக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், காயமடைந்த அன்பரசு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் ஐந்து பேர் கொண்ட கும்பலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.