திருவள்ளூர் அடுத்த புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற மயான கொள்ளை உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. குழந்தை பாக்கியம் மற்றும் திருமண தடைகள் நீங்க அம்மனை வணங்கினால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கடந்த 15ம் தேதி பந்தக்கால், கொடியேற்றம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இவ்விழாவில், மகா அபிஷேகம், பொங்கலிட்டு படையல், வீதி உலா, அன்னதானம், அம்மன் மயான கொள்ளை சூறை வைபவம் ஆகியவை நடைபெற்றன.