நலதிட்டங்கள்குறித்து துண்டுபிரசுரம் வழங்கிய முன்னாள்அமைச்சர்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,000, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், ஆண்டுக்கு 3 சமையல் கேஸ் சிலிண்டர்கள், 150 நாள் வேலைவாய்ப்பு மற்றும் அம்மா இருசக்கர வாகனத் திட்டம் மீண்டும் அமல்படுத்துதல் போன்ற முக்கிய நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. இது குறித்து மாநில எம்ஜிஆர். இளைஞர் அணி துணை செயலாளர் எஸ். ஞானக்குமார் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பி. வி. ரமணா பொது மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துச்சொல்லி, 2026-ல் அதிமுக ஆட்சி அமைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி