இந்திரா கல்வி குழுமம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா:

திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் உள்ள இந்திரா கல்வி குழுமத்தில் சமத்துவ பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இதில் குழுமத்தின் தலைவர், நிறுவனர் மற்றும் திருவள்ளூர் எம்எல்ஏ வி. ஜி. ராஜேந்திரன், மேலாண்மை இயக்குனர் இந்திரா ராஜேந்திரன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மாணவர்கள் சிலம்பம், உரியடித்தல், தப்பாட்டம், பறையாட்டம், வாள் வீச்சு போன்ற வீர விளையாட்டுகளிலும், பரதநாட்டியம் மூலமாகவும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். ஸ்ரீபடவேட்டம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது. கோலப் போட்டி, நடனப் போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டீன். டாக்டர் வசந்தாமணி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி