திருத்தணி: காவலரை தாக்கிய போதை ஆசாமி கைது

திருத்தணி அனுமந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகன்(30) என்பவர், நேற்று மாலை மதுபோதையில் திருத்தணி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடையில் இலவச சிகரெட் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது ரோந்து பணியில் இருந்த சிறப்பு பிரிவு போலீஸ்காரர் அவரை விசாரிக்க முயன்றபோது, ஆத்திரமடைந்த ஜெகன் அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். இதையடுத்து போலீஸ்காரர் அளித்த புகாரின் பேரில் ஜெகன் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி