இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாகவும், பாரத ரத்னா விருது பெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பிறந்த திருத்தணி அருகில் உள்ள வெங்கடாபுரம் கிராம மக்கள் ராதாகிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடுகின்றனர். மேலும் ஆசிரியர்கள் சங்கங்கள், ரோட்டரி சங்கங்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி உள்ளிட்டோர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளுக்கு அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து ஆசிரியர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
அவர் ராதாகிருஷ்ணன் படித்த பள்ளியில் அவரது சிலைக்கு மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து அந்தப் பள்ளியில் ஆசிரியர்களாக உள்ளவர்களுக்கு மாணவர்கள் இனிப்புகள் மற்றும் பூக்களை வழங்கி ஆசிரியர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.