திருவள்ளூர்: 100 நாள் பணியாளர்களை வைத்து நாடகம் ஆடுகிறது திமுக: மு. அமைச்சர்

தமிழகத்தில் 100 நாள் பணிகளில் போராட்டம் என்ற பெயரில் திமுக அரசு நூறு நாள் பணியாளர்களை வைத்து நாடகம் ஆடுகிறது திமுக அரசு முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும். இந்த திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் வந்திருந்தார். 

முருகன் கோயில் சாமி தரிசனம் செய்த அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது: தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஒருங்கிணைப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளராக அதிமுக அடிமட்ட தொண்டர் முதல் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தில் 100 நாள் பணியாளர்களை வைத்து 'போராட்டம்' என்ற பெயரில் மத்திய அரசை குற்றம் சாட்டி நாடகம் ஆடி வருகிறது திமுக அரசு. நல்ல விஷயத்திற்கு போராட்டம் நடத்தினால் பரவாயில்லை. இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாடகம் ஆடி வருகிறார்கள். இந்த திமுக அரசு என்று பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.

தொடர்புடைய செய்தி