ஆபத்தான முறையில் டிஜிட்டல் பேனர்கள்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் மலைக்கோயில் அடிவாரம் முதல் திருத்தணி நகரத்தில் அனைத்து இடங்களிலும் அனைத்து முக்கிய சாலைகளிலும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி அனுமதி இல்லாமல் டிஜிட்டல் பேனர்கள் ஆபத்தான முறையில் மின் கம்பங்கள், உயர்நிலை குடிநீர் தொட்டிகள், போன்ற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது வடக்கிழக்கு பருவமழை வருகின்ற சூழ்நிலையில் அப்போது டிஜிட்டல் பேனர்களால் மின்சார விபத்துக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் தலைகளில் இந்த டிஜிட்டல் பேனர்கள் விழுந்தால் ஆபத்து மிக கொடூரமான முறையில் இருக்கும். மேலும் திருத்தணி முழுவதும் கடைகளுக்கு முன்பு சாலைகளை ஆக்கிரமித்து கடை விளம்பர பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பேனர்கள் விபத்து ஏற்படுவதற்கு முன்பு அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து திருத்தணியில் உள்ள பொது மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று அரசுக்கு திருத்தணி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி