இந்த மான் பிரேதம் சாலை நடுவில் இருந்ததை வாகன ஓட்டிகள் மேலும் வாகனங்கள் மோதாமல் இருக்க மான் சடலத்தை அருகில் சாலை ஓரம் எடுத்து வைத்தனர். சம்பவ இடத்திற்கு சம்பவம் நடந்தது குறித்து போலீசாருக்கும் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்த பின்பும் நான்கு மணி நேரத்திற்கு மேலாக மான் சடலத்தை எடுக்க வனத்துறை அதிகாரிகள் வரவில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் குற்றச்சாட்டியுள்ளனர்.
மான் சடலத்தை கவ்வி செல்ல தெரு நாய்கள் சுற்றி வருகிறது. தெருநாய்களின் தொல்லையிலிருந்து மான் சடலத்தை காத்து வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதுபோல் சம்பவங்களில் விரைந்து வனத்துறையினர் மற்றும் போலீசார் செயல்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.