திருவள்ளூர்: ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட காக்களூர் ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதாகக் கூறப்படுகிறது. சுமார் 194 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, 15 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் திறன் கொண்டது. கடந்த காலங்களில் இப்பகுதி விவசாயிகளுக்கு இந்த ஏரி நீர் ஆதாரமாக இருந்துள்ளது. தற்போது, ஏரியை ஒட்டி குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் உருவாகியுள்ளன. ஏரியில் உள்ள இறந்த மீன்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி