உடனடியாக அங்கிருந்த சிவகுமார் உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் சிவகுமாரை படுகாயம் அடைந்த வரை அருகில் உள்ள பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் அழைத்து வந்து சேர்த்துள்ளனர். அப்போது பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியவில்லை என்பதால் அவர் மரணம் அடைந்துவிட்டார் என்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததை அவரது மரணத்திற்குக் காரணம் என்று குற்றச்சாட்டை முன்வைத்து சிவகுமார் உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொதட்டூர்பேட்டையிலிருந்து அத்திமஞ்சேரிபேட்டை செல்லக்கூடிய மாநிலநெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தையும் சிறைப்பிடித்து இவர்கள் சாலைமறியல் செய்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற திருத்தணி போலீசார் சாலைமறியல் செய்தவர்களிடம் 2 மணிநேரம் பேச்சுவார்த்தை செய்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அளித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு சாலைமறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.