சென்னை: மது போதையில் நள்ளிரவில் கடைகளை அடித்து நொறுக்கிய திருநங்கைகள்

சென்னை பெரியமேடு என்.எச் சாலையில் கடந்த பிப்.20-ம் தேதி இரவு, மது போதையில் இருந்த 5-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் அங்கிருந்த கடைகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். சாலையோரம் இருந்த மளிகை கடை மற்றும் தள்ளுவண்டி கடைகளை அவர்கள் சரமாரியாக சூறையாடியதால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த வன்முறை சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி