திருத்தணி மலை கோயிலுக்கு ஆட்டோக்கள் செல்ல தடை

திருத்தணி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். நாளை முகூர்த்த தினம் மற்றும் நாளை மறுநாள் வைகாசி விசாகம் என்பதால், இந்த இரு நாட்களிலும் சிறப்பு விழாக்கள் நடைபெற உள்ளன. இதனால், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்கும் வகையில், கோயில் நிர்வாகம் நாளை (மே 29) மற்றும் நாளை மறுநாள் (மே 30) மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்வதற்கு தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி