திருவள்ளூர்: இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்; அசாம் இளைஞர் கைது (VIDEO)

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒப்பந்ததாரர்கள் மூலமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அதிகளவு பணிபுரிந்து வருகின்றனர். கனகம்மா சத்திரம் அருகில் இந்தத் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பாலப்பணி ஒன்று நடைபெற்று வருகிறது. இதன் அருகில் 20க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் தற்காலிகக் குடிசைகளை அமைத்து தங்கி வருகின்றனர். 

இந்நிலையில் அவ்வழியாகச் சென்ற இளம்பெண்ணிடம் அசாம் மாநில இளைஞர் இக்ரம் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட முயற்சி செய்துள்ளார். இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டவுடன் அந்தப் பகுதியில் இருந்து கிராமம் மக்கள் ஒன்றுதிரண்டு அசாம் மாநில இளைஞரைப் பிடித்து கனகம்மா சத்திரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

மேலும் சம்பவ இடத்தில் திருத்தணி டிஎஸ்பி கந்தன் ஆய்வாளர் நரேஷ் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திலுள்ள புல் செடி புதர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்து தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். ரகசிய இடத்தில் இளம்பெண்ணிடமும் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் வடமாநில அசாம் மாநில இளைஞர்கள் தங்கியுள்ள மற்ற இடங்களிலும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி