திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் கடந்த ஒரு வாரமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இளநிலை உதவியாளருக்கு நிகரான ஊதியம், சமையல் உதவியாளருக்கு அலுவலக உதவியாளர் நிலையிலான ஊதியம், காலமுறை ஊதியம், 10 ஆண்டுகள் பணிபுரிந்த தகுதியான ஊழியர்களுக்கு அரசு பணியில் அமர்த்தல், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி காப்பீடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.