திருவள்ளூர் அருகே கொலை வழக்கில் குற்றவாளி கைது

பூங்காநகரைச் சேர்ந்த இந்துமதி (34) தனது கணவர் அசோக்குமார் (40) நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இது குறித்து தனது அத்தை மகனான சந்திரபோஸ் (41) என்பவரிடம் தெரிவித்துள்ளார். சந்திரபோஸ் தனது நண்பர் நித்தியானந்தம் (38) உடன் அசோக்குமார் வீட்டிற்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அசோக்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் நித்தியானந்தம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சந்திரபோஸ் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி