இதனை தொடர்ந்து திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை மகா கும்பாபிஷேக விழா முன்னிட்டு கோயில் மற்றும் கிராம வீதிகள் வண்ண விளக்குகள் மற்றும் மலர்கள், வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு நித்திய ஹோம பூஜைகள் நடைபெறும்.
விழாவில் மூன்றாம் நாளான இன்று காலை மஹா பூர்ணாஹுதி ஹோம பூஜைகள் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று கோபுர கலசம் மற்றும் மூலவர் சன்னதி கோபுர உச்சியில் புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோயில் முன்பு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் மீது தீர்த்த நீர் தெளிக்கப்பட்டது.
காமாட்சி அம்மன் மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர். திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.