திருவள்ளூர்: 41 அடி உயர சிவலிங்கத்துக்கு 1008 பால்குட அபிஷேகம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஸ்ரீ பொம்மியம்மாள் சமேத முக்தீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் 41 அடி உயர பிரமாண்ட சிவலிங்கத்திற்கு 1008 பால்குட அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ராட்சத கிரேன் மூலம் நடைபெற்ற இந்த பால் அபிஷேக நிகழ்ச்சியில் திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் காணிக்கையாக பாலை வழங்கி பிரார்த்தனை செய்தனர்.

தொடர்புடைய செய்தி