இதில் இருசக்கர வாகனங்களில் பயணித்த மூவரும் அந்தரத்தில் பறந்துபடி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாலிக் பாஷா (35) என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த யுவராஜ் (20), பாலச்சந்தர் (20) ஆகிய இருவரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே விபத்து தொடர்பான நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு