போலீசாரின் விசாரணையில், அவர் இறப்பதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் குறைவான இந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு இந்த சூழ்நிலையில் தன்னால் வாழ முடியவில்லை. எனவே நான் செல்கிறேன் என எழுதி வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். கார்த்திக் கடன் வாங்கி இருந்ததாகவும் அதனை திருப்பிச் செலுத்துவதில் கடும் சிரமத்தில் இருந்து வந்ததால் ஏற்பட்ட மனஉளைச்சலில் இருந்து வந்தவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்