திருவேற்காட்டில் பெண் வீடு புகுந்து வெட்டிக்கொலை

சென்னை திருவேற்காடு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த கலைபவானி என்ற பெண்ணை, முருகன் என்பவர் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்தார். முருகன் அப்பகுதியில் துணி அயர்ன் செய்யும் கடை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தப்பி ஓட முயன்ற கொலையாளி மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் கலைபவானியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி