பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் 2017 ஆம் ஆண்டு முகம் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பிரதீப் வழக்கில், ஹரிகுமார், ராஜுன்கின்கு, அன்சாரி ஆகிய 3 பேருக்கு பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் நேற்று (நவ.25) தீர்ப்பளித்தது. இதில் ஹரிகுமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ராஜுன்கின்கு, அன்சாரி ஆகியோருக்கு தலா இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி விஜயகுமார் உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.