திருவள்ளூா்: கோயிலில் ரூ.25 லட்சம் வெள்ளிப் பொருட்கள் திருட்டு

திருவள்ளூா் அருகே அரண்வாயல் பகுதியில் உள்ள ஸ்ரீபாலமுனீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை கோயில் திறக்கச் சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வெள்ளி கிரீடம், திருவாச்சி, கால் பாதம், சூலம், ஈட்டிக்கோல், உடல் கவசம், காமாட்சி அம்மன் விளக்கு, ராஜகணபதி கண்மலா், விபூதி பட்டை உள்ளிட்ட சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்களும், 25,000 ரொக்கப் பணமும் திருடு போனது.

தொடர்புடைய செய்தி