தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் இடையூறு இன்றி வெளிவந்து வெற்றி பெற வேண்டி, தவெக தொண்டர்கள் பூந்தமல்லி அடுத்த மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினர். தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் காரணமாக தாமதமான இந்தப் படத்திற்காக, தொண்டர்கள் 100 டஜன் வளையல்களை அம்மனுக்கு சாத்தி, பின்னர் பக்தர்களுக்கு வழங்கி, படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.