எண்ணூர், மணலி பகுதியில் டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகத்தில், பள்ளி, வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே செயல்படும், 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என, தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த வரிசையில், எண்ணுார் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வந்த, எண். 8824 டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

அதேபோல, மணலி – பாடசாலை தெருவில், செயல்பட்டு வந்த, எண்: 8840 டாஸ்மாக் கடையும் மூடப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி