திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் உள்ள பழமையான ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், கடந்த 21ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி, 22ஆம் தேதி புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.