கெருகம்பாக்கத்தில் அதிமுக சார்பில் நடந்த பொங்கல் விழா

பூந்தமல்லி அடுத்த குன்றத்தூர் அருகே கெருகம்பாக்கத்தில் அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் எம்எல்ஏ கே. பி. கந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தார். ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடிய இந்த விழாவில், அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. கிராமங்களில் வழக்கமாக மாடுகளை அலங்கரித்து அழைத்துச் செல்லும் நிலையில், அலங்கரிக்கப்பட்ட மாட்டின் முன்பு பெண்களும் ஆண்களும் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி