புழல் சிறை முன்பு மக்கள் கூடும் இடத்தில் கேமராவுடன் கூடிய போலீஸ் பூத் திறக்கப்பட்டது. போதை வஸ்துக்களின் நடமாட்டத்தை குறைக்கவும், சிறையில் பொதுமக்கள் பார்வையாளர்கள் உள்ளே செல்லும்போது அவர்கள் வைத்திருக்கும் பைகளில் போதை பொருட்கள் உள்ளதா எனவும், சிறை வளாகத்தைச் சுற்றியுள்ள இடங்களில் ஆறு கண்காணிப்பு கேமராக்களை நிறுவி அதனை 24 மணி நேரமும் கண்காணித்து குற்றத்தில் ஈடுபடும் நபர்களை விரைந்து பிடிக்க கேமரா பூத் திறக்கப்பட்டது. இதில் ஒரு உதவி ஆய்வாளர், ஒரு காவலர் பணியில் ஈடுபடுவார்கள். இதனை கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் பாண்டியராஜன் கேமரா போலீஸ் பூத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் போலீசார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.