மதுரவாயல்: அரசு பள்ளியில் புதிய கட்டடம்: துணை முதலமைச்சர் திறப்பு

மதுரவாயல் அருகே நெற்குன்றம் 148 வது வார்டு மேட்டுக்குப்பம் பள்ளி தெரு பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மக்களின் கோரிக்கையை அப்பகுதி கவுன்சிலர் கிரிதரன் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் வலியுறுத்தி இருந்தார். 

அதன்படி ரூபாய் 62 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டது. அந்த புதிய கட்டடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கட்டடம் திறக்கப்பட்டவுடன் கவுன்சிலர்  கிரிதரன் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். அத்துடன் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவி ஒருவருக்கு கவுன்சிலர் மற்றும் பள்ளி முதல்வர் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி