இந்த மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர். இடித்து அகற்றப்பட்ட இடத்திற்கு வரி செலுத்தக் கோரி திருவேற்காடு நகராட்சி நிர்வாகம் கட்டாயப்படுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கொதிப்படைந்தனர். இருக்கும் வீட்டையும் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடித்து தனியார் கல்லூரிக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், மாற்று இடமும் வழங்காமல் அலைக்கழித்துவிட்டு, தற்போது இல்லாத வீட்டிற்கு வரி கேட்பது எந்த விதத்தில் நியாயம் எனக் கேட்டு திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்