ராஜு பிஸ்வகர்மாவிற்கு பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்க ஆரம்பாக்கம் காவல்துறையினர் கடந்த 28ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு செய்த நிலையில் 29 தேதி புழல் சிறையில் இருந்து கொண்டு வரப்பட்டு திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உமாமகேஸ்வரி 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்ததை தொடர்ந்து அவரை குமுடிப்பூண்டி டிஎஸ்பி ஜெயஸ்ரீ கொம்முடிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தார்.
குற்றவாளி வேலை செய்ததாக கூறப்படும் சூலூர்பேட்டை தாபா ஹோட்டலில் உடன் வேலை பார்த்த 4 நபர்கள் மற்றும் செல்போன் பழுது பார்க்கும் கடை உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரை விசாரித்து அவர்களிடம் ஆதாரங்களை சேகரித்த பின்னர் விடுவித்தனர். இந்நிலையில் 4 நாட்கள் விசாரணை முடிவடைந்து குமுடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் உடல்பரிசோதனை செய்து இன்று மீண்டும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறைச்சாலைக்கு துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார்.