மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் அமைச்சர் ஆய்வு

திருவள்ளுர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியத்தில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றும் பணிகள் தொடர்பாக அமைச்சர் சா. மு. நாசர் அவர்கள் தீர்த்தகரியம்பட்டு குமரன் நகர் பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மழை நீரை விரைந்து வெளியேற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் மு. பிரதாப், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் மற்றும் வருவாய், ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலைகள் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி