இந்நிலையில் ராமாபுரம் எல்&டி நிறுவனத்தின் வாயில் பகுதியில் மெட்ரோ பாலத்தின் பில்லர் ஒன்று உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பில்லர் விழுந்த இடத்தில் சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இரவோடு இரவாக சாலை புதுப்பிக்கப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை புதுப்பிக்கப்பட்ட சாலையின் அடியிலிருந்து திடீரென தண்ணீர் பெருக்கெடுத்தது.
இதைக் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெள்ளம் போல் எல்&டி நிறுவனத்தில் இருந்த மழை நீர் வடிகால் கால்வாயில் நீர் பாய்ந்தது. இதை அடுத்து தண்ணீரை ஆய்வு செய்த அதிகாரிகள் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அதனை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் உடைப்பு சீர் செய்யப்பட்டது.