பூந்தமல்லி, மதுரவாயல், ஏரிக்கரை பகுதி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையின் இருபுறமும் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல். வெளியூரிலிருந்து ஆம்னி பேருந்துகள் அதிகளவில் சென்னை கோயம்பேடு நோக்கி வருவதாலும், அதேபோல் பறக்கும் பாலம் திட்டம் நடந்துவரும் நிலையில் தற்போது இந்த போக்குவரத்து நெரிசலானது உண்டாகியுள்ளது. கார், பைக், ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அமைப்போல் ஊர்ந்துசெல்லக்கூடிய காட்சி நம்மால் காணமுடிகிறது. மதுரவாயல் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை ஆங்காங்கே சீர்செய்தும் வருகின்றனர்.