பூந்தமல்லி சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, குன்றத்தூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவ, மாணவியரும், அலுவலகம் முடித்துச் செல்லும் பொதுமக்களும் மழையில் நனைந்தபடி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் பலர் மழையிலிருந்து தஞ்சம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி