திருத்தணி: மயானக் கொள்ளை கோலாகலம்.. திரளான பக்தர்கள் தரிசனம்

திருத்தணி பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானக் கொள்ளை உற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மகா சிவராத்திரி முடிந்து மாசி மாத அமாவாசையையொட்டி நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்தார். பக்தர்கள் அலகு குத்தி, காளி வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி