இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், வி. சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன் உள்ளிட்ட திரளான அதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், ஸ்ரீ திரு ஊரகப் பெருமாள் கோயிலில் இருந்து 1001 பெண்கள் பால்குடங்களை தலையில் ஏந்தியவாறு "கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா", "வெற்றி வேல், வீர வேல்" என பக்தி கரகோஷங்களை எழுப்பிய வாறு, ஊர்வலமாக குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு சென்று, முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகப்பெருமானை மனமுருகி வேண்டி விரும்பி சாமி தரிசனம் செய்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
மேலும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதிமுகவினர் அன்னதானங்களை வழங்கி எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.