இதில் சேவல்கள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக பறந்து மோதும் காட்சிகள் சுற்றியுள்ள பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. இதனை காண திருவள்ளூர் மற்றும் பேரம்பாக்கம் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால் சேவல் சண்டை போட்டி களைகட்டியது. நேற்று வரை மொத்தம் 1500 சேவல்கள் களத்தில் நேருக்கு நேர் மோதியிருந்தன. இந்த சேவல் சண்டை போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பாண்டிச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து நூரி, கதர், ஜாவா, யாகூத், கீரி, பீலா, கிளிக்கொண்டை, வெள்ளைக்கொண்டை, முள்ளு சேவல் உள்ளிட்ட பல வகையான சண்டை சேவல்கள் இதில் பங்கேற்றன.
சேவல் சண்டை போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. சேவல் சண்டை போட்டியில் வெற்றி பெற்ற சேவல்களுக்கு தங்க காசு மற்றும் சான்றிதழ், கோப்பைகள், ஸ்டீல் பாத்திரங்கள் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. நீண்ட வரிசையில் காத்திருந்து சேவல் உரிமையாளர்கள் ஏராளமான பரிசுப் பொருட்களை அள்ளிச் சென்றனர்.