திருவள்ளூர்: ஆட்டோ ஓட்டுநர் வயிற்றில் அடிக்கும் மினி பேருந்து - வாக்குவாதம்

திருவள்ளூர் மாவட்டம் நேமம் கிராமத்தில் கல்கி பகவான் ஆசிரமம் அருகே ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தி மினி பேருந்து பக்தர்களை ஏற்றிச் செல்வதால் காலை முதல் நண்பகல் வரை ஆட்டோ சவாரி இன்றி தொழில் செய்து வரும் ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் அவதிக்கு ஆளானதால் மினி பேருந்து ஓட்டி வந்த நபரிடம் பர்மிட் வைத்திருந்தாலும் பேருந்து நிலையத்தில் நிறுத்தி பொதுமக்களை ஏற்றி செல்லுமாறு அறிவுறுத்தினர். தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் விதத்தில் ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தி சவாரிக்கு வரும் பொதுமக்களை ஏற்றிச் சென்றால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனை பூவிருந்தவல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்து மினி பேருந்து சேவையை வரைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் மினி பேருந்து டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி மேற்கு ஒன்றிய பாஜக தலைவர் எல். பிரபாகரன் அவர்களை சமரசம் செய்து மினி பேருந்தை அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லுமாறு அறிவுரை கூறி சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.

தொடர்புடைய செய்தி