அவர் அந்த பெண்ணிடம் உதவி கேட்பது போல் நடித்து திடீரென பெண்மணியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறிக்க முயன்றார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட அந்த பெண் கதவை மூடிவிடவே கதவை இழுத்து திறந்து பெண்ணைத் தாக்கி அத்துமீறி சங்கிலியை பறிக்க முயன்றார். இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து சர்வ சாதாரணமாக தப்பிச் சென்றார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வானகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சச்சின் (அ) சதீஷ் என்ற வாலிபரை போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது அவர் தப்ப முயன்று கீழே விழுந்ததில் வலது கை முறிந்து மாவு கட்டு போடப்பட்டுள்ளது. இவர் மீது திருவேற்காடு காவல் நிலையத்தில் போக்ஸோ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்