கும்மிடிப்பூண்டி: திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கும்மிடிப்பூண்டியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக பாமக, தமாகா, பாஜக, புரட்சி பாரதம் கட்சி பிரமுகர்கள் திரளாக பங்கேற்றனர். வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி