சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் ரேணுகாவை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரேணுகா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன ரேணுகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ரேணுகா கடந்த சில தினங்களாக பள்ளிக்கு சரியாக செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பள்ளிக்கு தாமதமாக சென்றதால் ஆசிரியர்கள் பெற்றோரிடம் கூறியதாகவும், இதனால் பெற்றோர் ரேணுகாவை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.