திருவள்ளூர்: போதை பொருள் வைத்திருந்த திரைப்பட நடிகை உட்பட 9 பேர் கைது

பூந்தமல்லி அருகே தடை செய்யப்பட்ட மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வந்த தகவலையடுத்து, விக்னேஸ்வரன்(35) மற்றும் வெங்கடேஷ்குமார்(31) கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா(30), துணை நடிகை வின்சி(நிவேதா)(26) மற்றும் கார்த்திக் ராஜா(31), யஸ்வந்த்(24), ஸ்ரீராம்(32), ஆல்வின்(26), தமிம் நிஸ்வான்(27) உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மெத்தப்பெட்டமைன், கஞ்சா, போதைப்பொருள் பயன்படுத்தும் இயந்திரங்கள், விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி