தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 21. 96 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3, 110 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து மணிக்கு 231 கன அடியாகவும் உள்ளது. இதில் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காகவும், சிப்காட் தொழிற்சாலை தேவைக்காகவும் தினமும் வெளியேற்றப்படும் நீரின் அளவு 138 கன அடியாக உள்ளது. தற்போது ஏரியில் தண்ணீர் 22 அடியை எட்டியுள்ளதால், முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு ஏரியில் இருந்து 100 கனஅடி உபரிநீர் திறந்து விடப்படும் என்றார்.
தென்னிந்திய மாநிலங்கள் ஒன்றிணைய வேண்டும் - ரேவந்த் ரெட்டி