இன்று (மார்ச்.30) காலை ஏரிக்கரையில் இயற்கை உபாதை கழிக்க சென்றவர்கள் சங்கர் தலையில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற ஆரணி போலீசார் விசாரணையில் மேலும் எஸ்பி சீனிவாச பெருமாள் நேரில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து மோப்பநாய் மற்றும் தடயவியல் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன, கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கர் கொலைக்கான முன்பகை என்ன என்பது குறித்து காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கிராமத்தை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களிலும் ஆய்வு செய்து குற்றவாளிகளை கண்டறியும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது