திருவள்ளூர்: மின்சாரம் தாக்கி பெண் பலி

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அடுத்த சத்தரை பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரின் மனைவி துர்கா (27), நேற்று முன்தினம் விவசாய நிலத்தில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, மின் மோட்டாரில் இருந்து கம்பத்திற்கு செல்லும் மின் கம்பியில் மாட்டின் கொம்பு சிக்கி, மின் கம்பி அறுந்து விழுந்தது. அதை எடுக்க முயன்றபோது துர்கா மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மப்பேடு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி