இதற்கு பல்வேறு அமைப்புகள் கட்சியினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த பிரச்சனைக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொன்னேரியில் உள்ள அம்பேத்கர் சிலை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலை சிறுத்தை கட்சியினர் தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். தமிழக அரசை வன்மையாக கண்டித்பதாகவும் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் பிரச்சனைக்கு தீர்வு காணாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டங்களில் தமிழக அரசுக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரே திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!